அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அடுத்தடுத்த அதிரடி; பால் நிறுவனங்களுக்கு ‘ஓபன்’ சவால்!

பாலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால், விஷத்தை வாங்கிக் குடிக்க முடியுமா?

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அளித்த பேட்டியில், “தமிழகத்தில் ஆவின் பால் தவிர, அனைத்து தனியார் நிறுவன பால் உற்பத்தியின் போதும், இறந்துபோனவர்களின் உடலைப் பதப்படுத்தும் ரசாயனம் கலக்கப்படுகிறது. இதனைக் குடித்தால் புற்றுநோய் வரும். இதனால் தான், இப்போதெல்லாம் நிறைய குழந்தைகளுக்கு கேன்சர் வருகிறது.

உண்மையான பால் என்றால், 5 மணி நேரத்தில் கெட்டுப் போக வேண்டும். ஆனால், நாள்கணக்கில் கெடாமல் இருப்பதற்கு பெயர் பாலா? இதிலிருந்தே அது ரசாயனம் கலக்கப்பட்ட பால் என்று தெளிவாக தெரிகிறது.

இதுகுறித்த ஆதாரங்களை நான் திரட்டி வருகிறேன். அதன்பின், நிச்சயம் அந்த தனியார் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்யப்படவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, “பாலில் ரசாயனம் கலப்பதை தனியார் நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். பெருவாரியான தனியார் நிறுவனங்கள் பால் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனம் கலக்கிறார்கள். கெட்டுப்போனால்தான் பால், இல்லையேல் அது ரசாயனம். தனியார் பால் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தவறு நடந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டால் சட்டரீதியாக அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், ‘பாலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால், விஷத்தை வாங்கிக் குடிக்க முடியுமா?’ என்றும் தனியார் பால் நிறுவனங்களிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Minister rajendra balaji asks private milk companies to prove their cleanliness

Next Story
தமிழக விவசாயிகள் போராட்டம்… பயன்களும் கடக்க வேண்டிய தூரமும்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express