Advertisment

தமிழகத்தில் கோவில்கள் அதிகமாக உள்ளன.. சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும்.. அமைச்சர் ராமச்சந்திரன்

கோவில்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளன. பயணிகள் தமிழகத்திற்கு அதிகமாக வருகின்றனர் கிட்டத்தட்ட கடந்த ஒரு ஆண்டில் 12 லட்சத்து ஐம்பதாயிரம் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Minister Ramachandran said that the tourism sector in Tamil Nadu will be improved soon

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை விரைவில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் 12.50 லட்சம் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் 12 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிந்துள்ளனர்.

இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் முதலிடம் தமிழகம் தான் அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டியின்போது தெரிவித்தார்.

Advertisment

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோவை வாலங்குளம் படகு இல்லம், காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டல் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “சுற்றுலாத்துறை என்பது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதமாக உள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் கோவில்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளன. பயணிகள் தமிழகத்திற்கு அதிகமாக வருகின்றனர் கிட்டத்தட்ட கடந்த ஒரு ஆண்டில் 12 லட்சத்து ஐம்பதாயிரம் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளனர்.

அவர்கள் இங்குள்ள கோவில்கள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று பாரம்பரிய கலைநயத்தை ஆர்வத்தோடு கண்டு களித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 12 கோடி பேர் வருகை தந்துள்ளனர்.

எனவே தமிழகம் தான் இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் முதல் இடத்தில் உள்ளது. நான் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றுலாத்துறை சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றேன்.

கோவை மாவட்டத்தில் பொழுதுபோக்கு இடமில்லை.இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் படகு இல்லம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மேம்பாடு குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம்.

அதேபோல ஊட்டியில் உள்ள படகு இல்லம் பைக்காரா நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலா தலங்களில் கூடுதல் வசதிகள் செய்து மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தற்போது கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் என்ன மற்றும் மேம்பாடுகள் என்ன என்பது குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

விரைவில் சுற்றுலாத் துறையில் மேம்பாடு அடைய நடவடிக்கை எடுக்கப்படும், கோவையில் மூன்று வகையான படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது” என்றார்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment