Advertisment

பள்ளிக் கல்வித்துறையில் 37 புதிய அறிவிப்புகள்; செங்கோட்டையன் அதிரடி!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பள்ளிக் கல்வித்துறையில் 37 புதிய அறிவிப்புகள்; செங்கோட்டையன் அதிரடி!

பள்ளிக் கல்வித்துறையில் 37 புதிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில்,

*நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

*பாடத்திட்டங்கள் மாற்றம் குறித்து வல்லுநர் குழு கருத்து கேட்டு ஒரு வாரத்தில் பேரவையில் தெரிவிக்கப்படும்.

*17,000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும்.

*மாணவியர் பயிலும் 5,639 அரசு உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் & எரியூட்டும் இயந்திரம் வழங்கப்படும்.

*சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது.

*இந்த ஆண்டு புதியதாக 30 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும்.

*பொதுத்தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

*பள்ளிகளில் இந்த ஆண்டு 10,000 கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

*ரூ.7,500 ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

*தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க நவம்பர் வரை கால அவகாசம் நீட்டிப்பு.  *மாணவர்களின் பொது அறிவை வளர்க்க 31,322 பள்ளிகளில் நாளிதழ், சிறுவர் இதழ் வழங்கப்படும்.

*மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அனுமதி.

*ரூ.30 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்கப்படும்.

*ரூ.3 கோடி செலவில் 32 மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படும்.

*மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்.                                             *மாணவர்களின் அறிவியல் தொழில்நுட்பம், கலைகளை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் 100 மாணவர்கள் மேலை நாடுகளுக்கு கல்விப் பயணம் அனுப்பி வைக்கப்படுவர்.

*அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு தொழில்நுட்ப நூல்கள் வாங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.

*சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அறிவியல் கோளம் ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும்.

*அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.2.10 கோடியில் திறன் வங்கி மையம் தொடங்கப்படும்.          *கீழடியில் சிந்து சமவெளி நாகரீகம் உள்ளிட்டவை குறித்து பழம்பெரு நூலகம் அமைக்கப்படும்.

*கலை அறிவியல் கல்லூரிகளில் 89 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.

*தமிழ்நாட்டில் பயின்று பிற மாநிலங்களுக்கு கல்வி பயிலச் செல்பவர்களுக்கு ஆன்லைனில் டி.சி வழங்கப்படும்.

*சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படும்.

Minister Sengottaiyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment