தமிழக சட்டப்பேரவையில் இன்றைய இரண்டாம் நாள் கூட்டத்தில், திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, நீட் தேர்வில் அரசின் கொள்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "ஜெயலலிதாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கிராமப்புற மாணவர்களை பாதுகாக்க உள்ஒதுக்கீடு கொண்டுவர சட்டவல்லுநர்களிடம் ஆலோசனை செய்து வருகிறோம்" என்றார்.
அப்போது, திமுகவின் துரைமுருகன் குறுக்கிட்டு, 'நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஏன் காலதாமதம் செய்கிறது?' என்று வினவினார். இதற்கு பதில் அளித்த விஜயபாஸ்கர், "நீட் தேர்வு குறித்த தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பவே இல்லை" என்று திடீரென குற்றம் சாட்டியுள்ளார்.