அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்!

ஆனால், சில காரணங்களால் ரம்யா நேற்று ஆஜராகவில்லை.....

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, இன்று காலை வருமானவரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

கடந்த மாதம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமானவரித்துறை நடத்திய சோதனையில், சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில், அவரது மனைவி ரம்யாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனால், நேற்றே அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமானவரித்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் ரம்யா நேற்று ஆஜராகவில்லை.

இதையடுத்து, தற்போது அவர் விசாரணைக்காக வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது என தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

×Close
×Close