திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பங்களை நேரில் சந்திக்க இன்று தூத்துக்குடி விரைகிறார்.
பெரும் பரபரப்புக்கு இடையே நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், இறுதியாக மஜத தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இன்று(23.5.18) கர்நாடகாவில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், , மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி, பாஜக ஆளாத மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான், நேற்று மதியம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பே பலியாகி உள்ளனர். மேலும், 50 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குமாரசாமி பதவியேற்பு விழாவை புறகணித்து விட்டு இன்று தூத்துக்குடி செல்வதாக அறிவித்துள்ளார்.
இதுக் குறித்து , தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின் பதிவிட்டுள்ள கருத்து.
,
,
இந்நிலையில், விமானம் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்ட ஸ்டாலின் அவர்கள், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
ஸ்டாலின் பேசியதாவது, “ தூத்துக்குடி துப்பாக்கி சூடு எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. உயிரிழப்பிற்கு பொறுப்பேற்று டிஜிபி ராஜேந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும். கையால் ஆகாத அரசை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமியும் பதவி விலக வேண்டும்” என்றார்
அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்திற்கு பதில் அளித்த ஸ்டாலின், “ ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் அமைச்சர் ஜெயக்குமார் இதுப் போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார். தூத்துக்குடிக்கு , அமைச்சர்களாவது நேரில் சென்று பார்வையிட்டு இருக்க வேண்டும். “ என்று தெரிவித்தார்.