/tamil-ie/media/media_files/uploads/2017/09/Coimbatore-bustand2.jpg)
கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக அந்த பேருந்து நிலையத்தின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று மதியம் சோமனூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மக்களின் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்சார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை தொடர்ந்து மீட்டு வருகின்றனர். இந்த விபத்தில் பேருந்துகளும் சேதம் அடைந்துள்ளன. விபத்து ஏற்பட்டதன் காரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சோமனூரில் பேருந்து நிலைய கூரை தகர்ந்து விழுந்தததில் 5 பேர் பலியாகியுள்ள செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
கோவை சோமனூரில் பேருந்து நிலைய கூரை தகர்ந்ததில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/Dn2929yEFV
— M.K.Stalin (@mkstalin) 7 September 2017
தமிழகத்தை பொறுத்தவரை மேற்கூரை மட்டுமின்றி, அரசு நிர்வாகத்தின் அடித்தளமும் சீர்கெட்டுக் கிடக்கிறது. விரைவில் நிலைமைகள் மாற்றப்படும்.
— M.K.Stalin (@mkstalin) 7 September 2017
பலியானவர்களின் குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்கூரை மட்டுமின்றி, அரசு நிர்வாகத்தின் அடித்தளமும் சீர்கெட்டுக் கிடக்கிறது. விரைவில் நிலைமைகள் மாற்றப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.