சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வது ஏன்? மு.க ஸ்டாலின் பதில்

செயலற்ற அதிமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவே திமுக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கூறும்போது: தமிழகத்தில் செயலற்ற அதிமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் வகையிலேயே திமுக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து வருகிறது. மேலும், வெளிநடப்பு செய்தாலும் மக்கள் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அது குறித்து விவாதிப்பதற்காக உடனே திமுக அவைக்கு திரும்புகிறது. ஆனாலும், இந்த வெளிநடப்பை சில ஊடகங்கள் திசை திருப்பும் வகையில் வெளியிடுவது வேதனையளிக்கும் வகையில் உள்ளது என்று கூறினார்.

×Close
×Close