முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதையும் படியுங்கள்: இந்தியாவில் ஒரு பெண்ணிற்கு பாதிப்பு என்றாலும் பா.ஜ.க துணை நிற்கும் : வானதி சீனிவாசன்
முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் தயாளு அம்மாளிடம் நலம் விசாரித்தார். பின்னர் தயாளு அம்மாளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil