ஜனாதிபதி தேர்தல் முடிந்தபின் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும்: மு.க ஸ்டாலின்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் சீரமைக்கப்பட்ட குளத்தை மு.க ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் நீர்நிலைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்றத்தில் சபாநாயகர் தனபால் சர்வாதிகரமாக செயல்படுகிறார்.

ஆர். கே நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் நிச்சயமாக சட்டமன்ற தேர்தல் வரத்தான் போகிறது. அதில் எந்தவித சந்கமும் இல்லை. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து, தேவைப்பட்டால் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை சந்திப்போம் என்று கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close