Advertisment

தமிழிசையின் தரம்தாழ்ந்த பேச்சுக்கு பதிலளிக்க விரும்பவில்லை: மு.க ஸ்டாலின்

எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்து எம்.எல்.ஏ-க்ளை விலைக்கு வாங்கலாம் என்பதே ஆட்சியாளர்களின் பிரச்சனையாக இருக்கிறது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

எம்.எல்.ஏ-க்களுக்கு எவ்வளவு கோடி கொடுத்து விலைக்கு வாங்கலாம் என்பதை குறிக்கோளாக கொண்டே தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவதாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறும்போது: தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியானது சட்டத்தை மதிக்ககாத ஆட்சி. தற்போது அரசு ஊழியர்கள் சட்டத்தை மதித்து நடப்பதை வரவேற்கிறேன். போராட்டம் குறித்து முன்னறிவிப்பு, கோரிக்கைகள் என அனைத்தையும் தெரிவித்துவிட்டே போராட்டத்தல் இறங்கினர். அப்படி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற போதே, அவர்களுடன் முதலமைச்சரோ, அல்லது அமைச்சரோ பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை எட்டியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதனைவிட்டுவிட்டு மிரட்டல் தெரிவிக்கும் விதமான நோட்டீஸ் அனுப்பினர்.

Advertisment

தற்போதைய நிலையில், எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்து எம்.எல்.ஏ-க்ளை விலைக்கு வாங்கலாம் என்பதே ஆட்சியாளர்களின் பிரச்சனையாக இருக்கிறது. ஆனால், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை கவலைப்படவில்லை.

திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால், நீட் தேர்வை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருப்பார் என தமிழிசை தெரிவித்திருக்கிறார். அது குறித்து கருத்து?

இதுபோன்று தரம்தாழ்ந்து பேசுபவர்களுக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள நான் தயாராக இல்லை.

செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால் ஆய்வுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ?

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு மட்டுமல்ல, ஆதிதிராவிடர் நலத்துறைக்கும் நிதி ஒதுக்கப்படாமலும் இருந்து வருகிறது. அதைப்பற்றியெல்லாம் இந்த ஆட்சி கவலைபட்டதாக தெரியவில்லை. இந்தி, மற்றும் சமஸ்கிருதத்திற்கு தாலாட்டு பாடக்கூடிய மத்திய அரசுக்கு, அடிபணிந்து தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி இருந்து வருகிறது.

என்று கூறினார்.

Bjp Dmk Jacto Geo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment