/indian-express-tamil/media/media_files/2025/10/28/mk-stalin-2025-10-28-17-03-08.jpg)
MK Stalin
சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சிக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சியுடன் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 'இறுதி திருப்புதல் (Revision)' என்று வர்ணித்ததுடன், தி.மு.க.வின் அடுத்த ஆட்சியை உறுதி செய்யும் வகையில், தலைப்புச் செய்தியையும் முன்கூட்டியே அறிவித்து நிர்வாகிகளை உத்வேகப்படுத்தினார்.
"திமுகவின் வெற்றி எதிரிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!"
தி.மு.க. நிர்வாகிகளைப் பார்த்துப் பேசிய முதலமைச்சர், "எப்போதும் மக்கள் கூடவே இருந்து பணியாற்றும் உங்களுக்கு, இந்தப் பயிற்சிக் கூட்டம் என்பது, 'எக்ஸாம்க்குப் பிரிப்பேர் ஆகுற ஸ்டூடண்ட், எல்லாத்தையும் படிச்ச பிறகு, மீண்டும் ஒருவாட்டி ரிவிஷன் பண்ணுவாங்கள்ல அப்படி, எலக்ஷன் எனும் எக்ஸாம் முன்னாடி நாம் பண்ற ரிவிஷன்தான்'" என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசியதாவது:
"2019-ஆம் ஆண்டு முதல், நாம் எதிர்கொண்ட அத்தனை தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளைப் பெற்று வருகிறோம். நம்மோட வெற்றிகள், நம்ம எதிரிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கு."
"2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெறப் போகிறோம். அன்று நியூஸ் ஹெட்லைன்ஸ் என்னவாக இருக்கும் என்றால், 'திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது!' இதுதான் தலைப்புச் செய்தி. இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை; உங்க உழைப்பு, ஆட்சியின் சாதனைகள், மற்றும் தமிழ்நாட்டு மக்கள் மேல வெச்சிருக்க நம்பிக்கைல சொல்றேன்."
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி M. K. Stalin அவர்கள் தலைமையில் #என்வாக்குச்சாவடி_வெற்றிவாக்குச்சாவடி என்ற முன்னெடுப்புக்காக ”கழக மாவட்ட செயலாளர்கள் - மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - pic.twitter.com/egfDy5rBV3
— Dr.K.Ponmudy (@KPonmudiMLA) October 28, 2025
திராவிட மாடல் சாதனைகளே பலம்!
தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்தும், அதனால் மக்கள் பெற்றுள்ள பலன்கள் குறித்தும் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
"நம்ம திராவிட மாடல் அரசோட திட்டங்களும், சாதனைகளும், கோடிக்கணக்கான மக்களோட உள்ளங்களிலும், இல்லங்களிலும் போய்ச் சேர்ந்திருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தையும், தொழில்துறையில் மிகப்பெரிய பாய்ச்சலையும், கல்வித் துறையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியிருக்க நம்மோட திட்டங்களும் சாதனைகளும்தான் திராவிட மாடலின் அடையாளம்."
"இந்தியாவில் எந்த மாநில அரசும் நம்மளவுக்குச் சாதனைகள் செய்திருக்க மாட்டார்கள். மீதமிருக்கும் சில வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றித் தருவோம். நம்ம அரசு செய்த சாதனைகளால்தான் நம்மால் தைரியமா எல்லார் வீட்டுக்கும் போய், ஆதரவு கேட்க முடிகிறது."
2026: தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் தேர்தல்!
மத்திய பா.ஜ.க. அரசின் துரோகங்கள் குறித்துப் பேசும்போது, தி.மு.க. நிர்வாகிகள் தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
"2021 தேர்தல் தமிழ்நாட்டை அ.தி.மு.க. கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். ஆனால், 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பாஜக - அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்து நாசம் செய்யத் திட்டமிடும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாகணும்."
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க.வைக் கட்சியின் அடிப்படை கொள்கைகளைத் துறந்து அமித்ஷாவிடம் சரண்டர் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். அந்தக் கூட்டணியை மக்களும் விரும்பவில்லை, கட்சிக்காரர்களும் விரும்பவில்லை.
"தமிழ்நாட்டுக்கு எதிராகக் கூட்டணி அமைத்திருக்கும் அவர்களின் சந்தர்ப்பவாதத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி, தி.மு.க. கூட்டணிக்கான வாக்குகளாக மாற்றும் கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கிறது."
இறுதியாக, "கலைஞரின் உடன்பிறப்புகள், நினைச்சதைச் செஞ்சு காட்டுவாங்கனு புரிய வைக்க வேண்டும். தொண்டர் இருக்கிற தைரியத்துலதான் தலைவர் இருக்கார்னு மறக்காமச் சொல்லுங்க," என்று கூறிப் பேச்சை முடித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us