அனைவரும் மீரா குமாருக்கு ஆதரவளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் மீராகுமாருக்கு தி.மு.க. இன்று ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்த போது, ”தமிழகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் மீராகுமாரை ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் மீரா குமார் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பா.ஜ.க., வெறும் பேச்சுக்கே பொது வேட்பாளர் என கூறியது. ஆனால் செயல் வடிவம் பெறவில்லை ” என கூறியுள்ளார்.

×Close
×Close