Advertisment

தந்தையைப் போல நீண்ட காத்திருப்பு இல்லை: உதயநிதி இனி அமைச்சர்

எம்.ஜி.ஆரை, முதல்வர் மற்றும் சூப்பர் ஸ்டார் என இரட்டை வேடங்களில் இருந்ததற்காக நாங்கள் கடுமையாக விமர்சித்தோம். உதயநிதியும் அவ்வாறே செல்வதை நாங்கள் விரும்பவில்லை- திமுக மூத்த அமைச்சர்

author-image
WebDesk
New Update
Udayanidhi Stalin

Udayanidhi Stalin

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தனது தந்தையின் அமைச்சரவையில் அமைச்சராக இணைந்துள்ளார். எம்.எல்.ஏ.வும், சினிமா நடிகருமான, தென்னிந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க திரைப்பட நிறுவனங்களில் ஒன்றின் தலைவருமான உதயநிதி (45) தமிழ் நாட்காட்டியில் ஒரு நல்ல நாளான டிசம்பர் 14 அன்று பதவியேற்கிறார்.

Advertisment

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் பிரதிநிதியான உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்ட அமலாக்கம் போன்ற இலாகாக்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உதயநிதி அமைச்சராக பதவியேற்பார் என்பது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்னிந்தியாவில் வணிகத்தில் கணிசமான பங்கைக் கட்டுப்படுத்தும் அவரது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனத்தில் அவரது திரைப்பட கமிட்மென்ட்கள் தாமதமாகின.

publive-image

இதுகுறித்து திமுக மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், அமைச்சரவை இலாகாவை வைத்திருப்பது முழு நேர வேலை. எம்.ஜி.ஆரை, முதல்வர் மற்றும் சூப்பர் ஸ்டார் என இரட்டை வேடங்களில் இருந்ததற்காக நாங்கள் கடுமையாக விமர்சித்தோம். உதயநிதியும் அவ்வாறே செல்வதை நாங்கள் விரும்பவில்லை, அவரின் சமீபத்திய படம் போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

புனிதமான தமிழ் மாதமான கார்த்திகையின் இறுதி நாளான டிசம்பர் 14, காலை 9.30 மணிக்கு உதயநிதி பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. தி.மு.க.வின் பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு ஏற்ப ஸ்டாலின் நாத்திகர் என்று கூறிக்கொண்டாலும், உதயநிதி, அவரது தாயார் துர்கா ஸ்டாலின், ஸ்டாலினின் செல்வாக்கு மிக்க மருமகன் சபரீசன் ஆகியோர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்.

ஸ்டாலின் அமைச்சர் பதவியில் ஏறுவதற்கு முன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. தனது தந்தையும் திமுக தலைவருமான மறைந்த கருணாநிதி முன்பாக, தனது 50வது வயதில்தான் முதன்முறையாக அமைச்சர் பதவியை ஸ்டாலின் ஏற்றார். இதனால் உதயநிதியும் அதே கதியை அனுபவிப்பதை அவரது தாய் துர்கா ஸ்டாலின் விரும்பவில்லை என்று இரண்டு குடும்ப உறுப்பினர்களும் இந்தியன் எக்ஸ்பிரஸிடம், கூறினர்.

உதயநிதிக்கு ஏற்கெனவே நிறைய பணிகள் இருப்பதால், அமைச்சர் பொறுப்பை ஏற்கத் தயங்கினாலும், அரசியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுவதற்கு தனது 50 அல்லது 60 வயது வரை தன் மகன் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதில் துர்கா ஸ்டாலின் உறுதியாக இருந்தார்

தி.மு.க. மற்றும் மாநில அரசின் விவகாரங்களில் ஈடுபட்டுள்ள மற்றொரு முக்கிய குடும்ப உறுப்பினர் கூறுகையில், காத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், கட்சியில் வம்ச வாரிசுகளுக்கு எதிராக ஒரு தள்ளுமுள்ளு ஏற்பட்டால், உதயநிதி அதை பின்னர் எதிர்கொள்ளாமல் இப்போதே எதிர்கொள்ளலாம் என்பதுதான் கணக்கு என்றார்.

ஒருவேளை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பதவிக்கு வந்தாலும் கூட உதயநிதி பொறுப்பேற்க வேண்டும். அதனால் அவர் இப்போது அதை எதிர்கொள்ளட்டும், திமுகவின் டெல்லி முகமாக இருக்கும் கனிமொழி உட்பட மற்ற கருணாநிதி குடும்பத்தினர் இப்போது தங்கள் பாத்திரங்களில் நன்கு செட்டில் ஆகிவிட்டனர் என்று அவர் கூறினார்.

ஸ்டாலினுக்கு எதிராக ஒரு காலத்தில் பகிரங்கக் கிளர்ச்சியைத் தொடங்கிய அண்ணன் மு.க.அழகிரி இப்போது போட்டியில் இல்லை.

மற்றொரு கட்சி வட்டாரத்தின்படி, திமுக காங்கிரஸிடம் இருந்து தனது குறிப்பைப் பெற்றுள்ளது.

2009 இல் சோனியா காந்தி ராகுல் காந்தியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் நியமித்திருந்தால், 2014 பொதுத் தேர்தலில் அதன் தோல்வி கடுமையாக இருந்திருக்காது, மேலும் 2022 இல் கட்சியின் நிலை மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். உதயநிதி ஏற்கனவே சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் முதல் அடியை எடுத்துவிட்டார் என்று அந்த வட்டாரம் கூறியது.

2009-2011ல் கருணாநிதியின் கீழ் முதலில் அமைச்சராகவும், பின்னர் துணை முதல்வராகவும் ஸ்டாலின் கற்றுக்கொண்டதைப் போல, உதயநிதிக்கு கற்றுத் தர மூத்த செயலாளர் ஒருவர் இருப்பார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சித் தலைவர்கள், ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டியை உதாரணம் காட்டுகிறார்கள், அவர் கருணாநிதியின் ஆட்சியில் திமுகவின் திட்டங்களுக்குப் பின்னால், குறிப்பாக ஸ்டாலினின் இலாகாக்களில் பல பயனுள்ள உத்திகளைச் செயல்படுத்திய பெருமைக்குரியவர்.

உதயநிதிக்கான திட்டங்கள், அவரது அலுவலகம் தயார் செய்வது உள்ளிட்டவை குறித்து திமுக மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாவது: எங்களால் ஏற்கனவே பல விளையாட்டு தொடர்பான மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தில், 234 விளையாட்டு வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன, ஒவ்வொன்றையும் உதயநிதி பார்வையிடுவார். அவர் நாகப்பட்டினத்திலிருந்து கிருஷ்ணகிரி வரையிலும், திருவள்ளூரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் பயணம் செய்வார். பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போன்ற அனைத்து கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு அவர் தலைமை தாங்குவார் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment