பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசு… தமிழக அரசு உடனடியாக தடுக்க வேண்டும் : மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டிவருவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சித்தூர் அருகே குப்பம் பகுதியில் ஆந்திர அரசு கட்டி வரும் தடுப்பணையை மு.க ஸ்டாலின் பார்வையிட்டார். இதன் பின்னர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது. ஆந்திர அரசு கட்டிவரும் தடுப்பணைகளால் தமிழகத்தில் தமிழகத்திற்கு நீர் வரத்து குறைந்து 5 மாவட்ட மக்கள் […]

tamil nadu news today live, mk stalin, மு.க. ஸ்டாலின்
mk stalin, மு.க. ஸ்டாலின்

பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டிவருவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சித்தூர் அருகே குப்பம் பகுதியில் ஆந்திர அரசு கட்டி வரும் தடுப்பணையை மு.க ஸ்டாலின் பார்வையிட்டார். இதன் பின்னர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

ஆந்திர அரசு கட்டிவரும் தடுப்பணைகளால் தமிழகத்தில் தமிழகத்திற்கு நீர் வரத்து குறைந்து 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இதனை தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஆந்திர அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mk stalin urged tn govt take steps to stop ap from building check dam across palar

Next Story
தமிழக மீனவர்கள் 5 பேர் கைது… இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!rameshwaram, chennai high court, firing on tamilnadu fishermen, inquiry by DSP, indian coast guard, tamilnadu government, tamilnadu fishermen
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X