பெரியாரின் ஆத்மா ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை மன்னிக்காது என்று அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத் தேர்தல் பிப்பரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அதிமுகவும் அதன் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளது என்று அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இந்த புகார் தொடர்பாக விரிவான அறிக்கையை தமிழக தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது: ” சமூக சீர்திருத்தம்தான் முக்கியம் என்று தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி நின்றவர் பெரியார். சாதிய ஏற்றத் தாழ்வை ஒழிக்க வேண்டும். எல்லோரும் சமம். பெண்கள் முன்னேற வேண்டும் என்று எண்ணிய பெரியார் என்றும் தேர்தலை சந்திக்கவில்லை. ஆனால் அவரின் பேரன் என்று சொல்லிக்கொள்ளும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதவிக்காக காங்கிரஸில் சேர்ந்து அமைச்சராக இருந்தார். மீண்டும் தமிழகத்திற்கு காங்கிரஸ் தலைவர் ஆனார். மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். தந்தை பெரியார் ஆத்மா அவரை மனிக்காது. பாஜக எங்களுக்கு பிரச்சாரம் செய்யவில்லை என்பதில் உண்மையில்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதுபோல, பாஜகவுடன்தான் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம்” என்று அவர் பேசினார்.