Advertisment

'இது நீடித்தால் ஆளுநர் தமிழிசைக்கு ஏற்பட்ட நிலை ஏற்படலாம்' - திமுக மறைமுக எச்சரிக்கை

திட்டங்கள், மக்கள் நல சட்டங்களுக்கு தடை ஏற்படுத்த நினைத்தால், ஆளுநர்கள் அவலங்களை சந்திக்க நேரிடும் என முரசொலி நாளிதழில் கட்டுரை வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
Sep 12, 2022 14:19 IST
'இது நீடித்தால் ஆளுநர் தமிழிசைக்கு ஏற்பட்ட நிலை ஏற்படலாம்' - திமுக மறைமுக எச்சரிக்கை

தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருவது வெளிப்படையாக தெரிகிறது. ஆளுநர் பல திட்டங்களுக்கு ஒப்பதல் அளிக்காமல் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆளுநரின் பல செயல்பாடுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக உள்ளது என குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், அண்மையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை அம்மாநில அரசு தனக்கு உரிய மரியாதை தரவில்லை எனக் கூறியதை சுட்டிக்காட்டி கட்டுரை வெளியிட்டுள்ளது. தனக்கு உரிய மரியாதையை தெலங்கானா அரசு கொடுக்கவில்லை எனக் கூறுவது ஆளுநரின் ஆதங்கம் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் நோக்கோடு ஆளுநர் செயல்படுவதாக தெலங்கானாவின் ஆளும் அரசு பல நேரங்களில் ஆளுநர் செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ளது என்றும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் அரசியல் நியமனமாக விளங்கும் ஒற்றை நபர், வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலச் சட்டங்களை தடுத்து நிறுத்தி காலதாமதப்படுத்தி, அதிலே அரசியல் செய்வதை எந்த அரசு தான் ஏற்கும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இரண்டு அதிகார மையங்களின் மோதலில் மக்கள் துன்பப்பட கூடாதே என்ற நல்லெண்ணத்தில் மாநில அரசு விட்டுக் கொடுத்துப் போக நினைக்கலாம் எனவும் இந்த மோதல் போக்கு நீடித்தால், ஆளுநர் தமிழிசைக்கு ஏற்பட்ட நிலை ஏற்படலாம் என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment