கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேற்று (ஏப்ரல் 8) நேரில் பார்வையிட்டார். சிறுவயது முதல் கட்சி பணி, முதல்வர் பணி வரை ஸ்டாலின் இதுவரை கடந்து வந்த பாதைகளை விவரிக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
Advertisment
தற்போது கோவையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் பார்வையிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட தி.மு.கவினர் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர். புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு புகைப்படங்களின் நிகழ்வுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஜி.வி.பிரகாஷ் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரணமாக இந்த நிலைமைக்கு வரவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு ஒரு கடைகோடி தொண்டனாக கட்சியில் இருந்து தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளதை இந்த புகைப்பட கண்காட்சியில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். அனைவரும் இந்த கண்காட்சியை வந்து பார்க்க வேண்டும். அப்போது முதல்வர் கடந்து வந்த பாதையை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
Advertisment
Advertisements
மிசா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காட்சிகள் என்னை கவர்ந்தது. மேலும் அவரது இளம் வயதில் கிரிக்கெட் விளையாடியது எல்லாம் என்னுடைய தலைமுறைக்கு தெரியாது. நம்முடைய முதலமைச்சரை பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல இடமாக உள்ளது. அனைவரும் வந்து பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“