நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது ரசிகர்களை சந்தித்து புகைபடம் எடுத்துக்கொண்டார். அப்போது, ரசிகர்கள் மத்தில் உரையாற்றிய ரஜினி, அரசியல் பிரவேசம் குறித்து பேசியது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்டலை, போர் வரும் போது தயாராக இருங்கள் என்று சூசகமாக தனது அரசியல் பிரவேசத்தை தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. இது தொடர்பாக சீமான் அப்போது கருத்து தெரிவிக்கும்போது: ரஜினி அரசியலுக்கு வரத் தேவையில்லை என்று கூறினார். அதோடு, ரஜினிகாந்த் தன்னை பச்சைத் தமிழர் என்று கூறி வருகிறார். ஆனால், மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகள் இருந்தால் மராத்தியனாக முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், வெள்ளையர்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்ததால், அவர்கள் தமிழகர்கள் ஆகிவிட முடியாது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக்-ஆக இருந்து வருகிறார். கமல்ஹாசன் எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்று கூறவே, இதனால் கடுப்பான அமைச்சர்களோ, கமல்ஹசன் மீது மாறி மாறி கடுமையான கண்டனங்ளை தெரிவித்தனர். அதோடு மட்டுல்லாமல், வழக்குப் போட்டுவிடுவோம் என்றும், வருமான வரி குறித்து சோதனை செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.
இவற்றிற்கெல்லாம், பதிலடி கொடுக்கும் வகையில் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிரடியான பதிவை வெளியிட்டார். மேலும், எனது துறையில் இருக்கும் புகாரை தெரிவிக்கிறேன். மக்கள் உங்கள் புகாரை அமைச்சர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று பதிவிட்டார். தன்னை விமர்சனம் செய்திருந்தவர்களுக்கு அந்த பதிவில் தக்க பதிலடியும் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 16-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு மரியாதை செலுத்த சீமான் வருகை தந்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் உருப்படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் சீமான் செய்திளார்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை நடிகர் கமல்ஹாசன் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இது தான் எனது விரும்பம். அவர் அரசிலுக்கு வருவதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார்.
முன்னதாக நடிகர் ரஜினி அரசிலுக்கு வருவதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்த சீமான், தற்போது கமல்ஹாசஹாசன் அரசியலுக்கு வருவதை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.