டெல்டா மாவட்டங்களை ஸ்டாலின் பார்வையிட வேண்டும்; மத்திய அரசை காரணம் காட்டி மடைமாற்றக் கூடாது: பிஆர்.பாண்டியன்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகள் ஒன்றியம் பாக்கம்கோட்டூர் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவைப் பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழிந்ததுக் குறித்து பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகள் ஒன்றியம் பாக்கம்கோட்டூர் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவைப் பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழிந்ததுக் குறித்து பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
paddy pr pandiyan

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகள் ஒன்றியம் பாக்கம்கோட்டூர் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை கதிர்கள் நீரில் மூழ்கி அழிந்து வருவதை நேரில் பார்த்து விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "காவிரி டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று 6.31 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisment

தற்போது 5 லட்சம் ஏக்கர் அளவில் அறுவடைப் பணிகள் முடிவுற்றிருக்கிறது. செப்டம்பர் மாதம் அறுவடை செய்யப்பட்ட நெல் தீபாவளி வரையிலும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் தேதியில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் நேரடி நெல் கொள்முதல் வாய்களில் 5 லட்சம் மெட்ரிக் டன் அளவில் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இவைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்படுவதும் முளைத்து வருவதும் வேதனை, தற்போது மத்திய அரசிடம் ஈரப்பதம் விளக்கு கேட்டு கடிதம் எழுதியதாகவும்,குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுவது  மடைமாற்றும் காலங்கடந்த செய்தியாகும். 

முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து விவசாயிகள் நம்பிக்கையோடு சாகுபடி செய்திருக்கிறார்கள். எனவே ஈரப்பதம் காரணம் காட்டாமல் நிபந்தனை இன்றி அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்வதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். முதலமைச்சர் நேரடியாக டெல்டா மாவட்டங்களை பார்வையிட வேண்டும். குறுவைக்கு தனிநபர் காப்பீடு செய்துள்ளனர். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும். சுமார் 2 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் அழுகத் தொடங்கி இருக்கிறது எனவே காப்பீட்டு நிறுவனங்களிடம் இழப்பீடு பெற்று தருவதோடு,பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். 

இப்பகுதிகளை மக்கள் பிரதிநிதிகள் அரசியல் கட்சி தலைவர்கள் பார்வையிட வரவில்லை.மாவட்ட ஆட்சியர் பார்வையிட வந்து எறும்பு கடித்து விட்டதாக திருப்பி சென்று விட்டார் என்ற வேதனையையும் தெரிவித்திருக்கிறார்கள். வேளாண்மை துறை தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக முடங்கி இருக்கிறது. வேளாண் துறை செயலாளர், இயக்குநர் நிலையிலான அதிகாரிகள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

Advertisment
Advertisements

அழிந்த பயிர்களை பார்வையிட  வராதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழக அரசு முடங்கி இருக்கிறதா? என்று அஞ்சத் தோன்றுகிறது. முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்".
திருமருகல் ஒன்றிய செயலாளர் எஸ்.பரமசிவம், ஒன்றிய பொருளாளர் ஐ.குமார் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் உடன் இருந்தனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

PR Pandian

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: