நாகை, தஞ்சையில் 1,500 ஏக்கர் குருவை நெல்கதிர்கள் வயலில் மூழ்கி சேதம்: கொள்முதலை விரைவுப்படுத்த கோரிக்கை

நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் சுமார் 1,500 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் சுமார் 1,500 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

author-image
Martin Jeyaraj
New Update
Nagapattinam Thanjavur 1500 acres of paddy fields submerged in floodwaters Tamil News

நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்தாததைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் டெல்டா மாவட்டங்களில் பரபரப்பு நிலவியது.

நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 1 லட்சம் ஏக்கரில்  குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குறிப்பாக கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கீழ்வேளூர், ஆழியூர், கூத்தூர், ராதாமங்கலம், திருக்கண்ணங்குடி, வடக்காலத்தூர், இருக்கை, தேவூர், செருநல்லூர், செம்பியன்மகாதேவி, கலசம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் குருவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. 

Advertisment

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் வயலில் தண்ணீர் வடியாத காரணத்தினால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து அறுவடை செய்து மகசூல் கைக்கு வரும் நிலையில் மழையால் நெல் மணிகள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அதே போல் மழையால் நெல் மணிகள் நனைந்து முளைக்கும் நிலையில் உள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் காட்டூர், வாண்டையார் இருப்பு, தலையாமங்கலம், நெய்வாசல், சாலியமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களில் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மழைநீர் வடிந்தால் மட்டுமே அறுவடை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. மேலும், தஞ்சாவூர் அருகே காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பதற்காக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளுடன் 15 நாட்களாக இரவு பகலாக காத்திருப்பதாகவும், நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர்- மன்னார்குடி சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் டெல்டா மாவட்டங்களில் பரபரப்பு நிலவுகிறது.

செய்தி: க.சண்முகவடிவேல்.

Nagapattinam Thanjavur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: