scorecardresearch

கிரிக்கெட் பேட் தாக்கியதில் கோமா நிலையிலிருந்த மாணவர் உயிரிழப்பு!

கிரிக்கெட் பேட் தாக்கி மூளைச்சாவு அடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Namakkal cricket bat, Teacher Kuppusamy, Paramathivellore,
Cricket bat and ball on green grass of cricket pitch

நாமக்கல்லில் கிரிக்கெட் பேட் தாக்கி மூளைச்சாவு அடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பெருமாள்- சின்ராஜ் தம்பதி. அவர்களின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன் திருச்செங்கோடு அருகே உள்ள விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். விக்னேஸ்வரன் அங்கிருக்கும் அரசு விடுதியில் தங்கி படித்து வந்தான்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஸ்வேஸ்வரன் தனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர் குப்புசாமியுடன் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது, எதிரபாராத விதமாக ஆசிரியர் குப்புசாமி கையில் இருந்த பேட் நழுவிச் சென்று, மாணவன் விஸ்வேஸ்வரனின் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், காயமடைந்த விஸ்வேஸ்வன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, விடுதிக்கு திரும்பினார். ஆனால், விஸ்வேஸ்வரன் சுயநினைவின்றி விடுதியில் இருந்ததால், சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதன்பின்னர் மாணவன் கோமா நிலைக்கு சென்றது தெரியவந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், விஸ்வேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான்.

இது தொடர்பாக உயிரிழந்த மாணவனின் பெற்றோர் கூறும்போது: எனது மகன் பொறியாளர் ஆக வேண்டும் என்ற ஆசையில் படித்து வந்தார். ஆனால் தற்போது உயிரிழந்துவிட்டான். இந்த சம்பவத்தை விபத்தாக பதிவு செய்யாமல், கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கூறினர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Namakkal student who was grt coma stage because of cricket bad hit died on wednesday