Advertisment

ராமர், லட்சுமணன், மோடி, அமித்ஷா படத்துடன் போஸ்டர்: எதிர்த்த பா.ஜ.க; வருத்தம் தெரிவித்த ஜவாஹிருல்லா

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி வைத்த பேனரால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாக எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி வைத்த பேனரால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாக எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து போஸ்டர் வைக்கப்பட்டது. இந்த போஸ்டரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் தேசியக் கொடியின் வண்ணங்கள் இருந்தது. அந்த பெண்ணின் இருபக்கமும் அமித்ஷா மற்றும் மோடி ராமர், லட்சுமணர்களைபோல் நிற்கும்படியாக சித்தரிக்கப்படிருந்தது.

இந்நிலையில் இந்த போஸ்டருக்கு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “ மனிதநேய  மக்கள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வதோடு, மனித நேய மக்கள் கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்.  முதலமைச்சர் ஸ்டாலின் அவ‌ர்க‌ளி‌ன் உருவத்தை கேலி சித்திரம் வரைந்ததற்காக சிலரை கைது செய்யும் காவல் துறை, ஹிந்து கடவுளை, நாட்டின் பிரதமரை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்யும் பதர்களை கைது செய்யாதது ஏன்? மதக் கலவரத்திற்கு வித்திடும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்களை கைது செய்ய தயங்குவது ஏன்?” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுருந்தார்.

இந்நிலையில் இதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏவுமான  ஜவாஹிருல்லா வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “ திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மணிப்பூர் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்காக ஒரு விரும்பதகாத விளம்பர தட்டி ஒன்று கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் வைக்கப்பட்டிருந்தது. இப்படியான ஒரு விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்ததும் மேல் நிலை நிர்வாகிகள் இத்தட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள். தட்டி வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில்.  போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த விரும்பதகாத தட்டி அப்புறப்படுத்தப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சி எந்த மதத்தினரின் உள்ளங்களையும் புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் கட்சியல்ல. இந்த விரும்பத்தகாத தட்டி வைப்பதற்கு காரணமானவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட்டார்கள். அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment