சசிகலா மீது சி.பி.ஐ. விசாரணை : ஜெ.தீபா அறிக்கை

சசிகலா மீது சி.பி.ஐ விசாரணை நடத்த ஜெ.தீபா கோரிக்கை வைத்துள்ளார்.

ச்சிகலா மீது சி.பி.ஐ விசாரணை நடத்த ஜெ.தீபா கோரிக்கை வைத்துள்ளார்.
.தி.மு.க. ஜெ.தீபா அணி பொதுச் செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சிறையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை கைதியாக உள்ளார். சிறை சென்ற பின்னரும் அதிகார பசியால் சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கையை தேடி உள்ளார்.

இதனை கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி. ரூபா வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதற்கு பதிலளிக்க முடியாமல் சிறைத்துறை அதிகாரிகள் திணறிவருகிறார்கள்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டது நாம் அறிந்ததே. தற்போது சிறையில் சசிகலா 5 மாத காலத்திற்குள் ஆடம்பர வாழ்விற்கு 2 கோடி லஞ்சப் பணமாக சிறை அதிகாரிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த தகவல் கிடைத்துள்ளது.

சிறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் என்பவர் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிற நிலையில் வெளிப்படையாக இதை செய்திருப்பதாக தெரிகிறது. மத்திய அரசு வழக்கம் போல் கவனகுறைவாக இல்லாமல் உடனடியாக மத்திய புலனாய்வு துறையை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சியிலும் மறைமுகமாக பங்கெடுத்து சசி குடும்பம் நெருக்கடி கொடுத்து வருவதால் மக்களுக்கான ஆட்சியாக நடைபெறவில்லை. அம்மாவின் மக்கள்நலத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனது தலைமையிலான உண்மையான அ.தி.மு.க. மக்கள் சக்தியுடன் விரைவில் இரட்டை இலையை மீட்டு அம்மாவின் ஆட்சியை நிறுவ பாடுபடுவோம்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை விரைவில் தொண்டர்கள் ஆதரவுடன் மீட்போம். சிறைத்துறை நடவடிக்கை சம்பந்தமாக கர்நாடக முதல்வரை தேவைபடும் பொழுது நேரில் சந்திக்க உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

×Close
×Close