மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு... மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஜூலை 14ஆம் தேதி அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

தமிழகத்தில் மருத்துவர் மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களிக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசின் அரசாணை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த  மேல்முறையீட்டு மனு மீதான  தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% ஒதுக்கீடு வழங்கும் வகையில் ஜூன் 22ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஜூலை 14ஆம் தேதி அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கும், அரசாணைக்கு ஆதராவாக மாநில பாடத்திட்ட மாணவர்கள் தொடர்ந்த இணைப்பு மனுக்களும், சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த கேவியட் மனுக்களும் நீதிபதிகள் நூட்டி ராமமோகன் ராவ், எம்.தண்டபாணி ஆகியோர் முன்னிலையில் மூன்று நாட்களாக விசாரணை நடைபெற்றது.

சிபிஎஸ்இ மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீட் தேர்வை அமல்படுத்தினால்  அது  கிராமப்புற மாணவர்களுக்கு  பலன் தராது என்றும், நகரப்புற  மாணவர்களுக்குதான் பலன் அளிக்கும் என்பதுதான் உண்மை என தெரிவித்தனர். 2006 முதல் 2016 வரை கிராமப்புறங்களிலிருந்து 340 பேர் மட்டுமே மருத்துவ இடம் பெற்றுள்ளனர் என்றும். அதில்  மாநில திட்டத்தில் படித்தவர்கள்  ஒரு சதவிதத்தினர் மட்டுமே என தெரிவித்தனர். மாநில பாடத்திட்ட தனியார் பள்ளிகளின் உந்துதலின் காரணத்தால் தான் இந்த  அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

மாநில பாடத்திட்ட மாணவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர்கள், அரசின் இதுபோன்ற சலுகைகளால்தான் கடந்த 10 ஆண்டுகளில் 340  மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம்  கிடைத்துள்ளது என்றும், இரண்டு பாடத்திட்டங்களும்  ஒரே மாதிரியானது என கூறமுடியாது என தெரிவித்தனர்.

ஏற்கனவே 15 % இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் மத்திய பாடதிட்ட பாடத்தில் படித்த மாணவர்களுக்கு சென்று விடுகிறது என்றும், 85 % இடஒதுக்கீடு பின்பற்றப்படாவிட்டால்  கிராமபுற மாணவர்களுக்கு மருத்துவ கல்வி என்பது எட்டாத கணியாகி விடும் என தெரிவித்தனர்.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, ஒரு மாநிலத்திலுள்ள  பள்ளிகளின் தரம், பாட திட்டங்களில், மற்றும்  மாணவர்களின் கல்வி தகுதிகள் உள்ளிட்டவை குறித்து அந்தந்த மாநில அரசுகளுக்கு தான்  தெரியும் என்றும், அதனடிப்படையில் மாணவர்களை கல்வி ரீதியாக பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்பதை உணர்ந்தே 85% உள் ஒதுக்கீடு அரசாணை பிறபிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

×Close
×Close