சென்னையில் தேசிய ஆதிதிராவிட ஆணைய துணைத் துலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: மாணவி அனிதா நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் கால்நடை மருத்துவம் அல்லது வேளாண்மை படிக்க அனிதா முடிவு செய்திருந்தார். கால்நடை மருத்துவப் படிப்பில் அனிதாவுக்கு இடம் கிடைத்தத நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, அனிதா தற்காலை செய்து கொள்ள மிரட்டல் மற்றும் வெளிப்புற அழுத்தம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அனிதாவின் தற்கொலையில் குடும்ப சூழல் என்ற சாத்தியக்கூறு மிகக் குறைவு.
தற்போதைய நிலையில் நீட் தேர்வு என்பது கட்டாயமாக வேண்டும். அகில இந்திய அளவில் நாம் போட்டிப்போடக் கூடிய நிலை உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.டி, எஸ்.டி துறையின் பயிற்சி மையங்கள் நடத்தப்படுகின்றன. 8-ம் வகுப்பு 9-ம் வகுப்பு படிக்கும்போதே மாணவ-மாணவிகளை தயார் படுத்துகின்றனர். அதுபோல, நமது மாணவர்களையும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் போட்டியிடும் வகையில் தயார் படுத்த வேண்டும். தமிழக அரசு இது தொடர்பான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.
அனிதா மரணம் குறித்து அரியலூர் மாவட்ட நிர்வாகம் இடைக்கால அறிக்கை கொடுத்துள்ளது. அது தொடர்பான முழுமையான அறிக்கை வந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.