நெல்லை செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

1000 பக்க ஆவணங்கள் கொடுத்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

1000 பக்க ஆவணங்கள் கொடுத்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jammu and Kashmir

நெல்லை செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்ய நெல்லை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

வழக்கறிஞர் பிரம்மா இது தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனம்நலம் பாதிக்கப்பட்டோரை காப்பகத்தில் சேர்ப்பது, அடையாளம் தெரியாத சடலங்களை வாங்கி எரிப்பது உள்ளிட்டவற்றில் நெல்லை செஞ்சிலுவைச் சங்கம் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறது என்று அவர் புகார் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நெல்லை செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர், பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் பிரம்மா தகவல் பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது: செஞ்சிலுவை சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அரசு மருத்துவமனையில் இருந்து சடலங்களை வாங்கி, செஞ்சிலுவை சங்கம் அவற்றை எரித்து வருகிறது.

Advertisment
Advertisements

ஆனால், மருத்துவமனையில் இருந்து கொடுக்கப்பட்ட சடங்களின் பட்டியலும், செஞ்சிலுவையில் இருந்து எரிக்கப்பட்ட சடலங்களின் பட்டியலும் வேறுபாடு உள்ளது. மருத்துவமனையில் இருந்து கொடுக்கப்பட்ட பட்டியலைக் காட்டிலும், அதிக சடலங்களை செஞ்சிலுவைச் சங்கம் எரித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் சடலங்களை எரித்ததில் முறைகேடு நடத்திருக்கிறது. மேலும், வரைவோலைகள் மாற்றப்பட்டத்திலும் முறைகேடுகள் நடந்திருக்கின்றன.

இது விவகாரத்தில், 1000 பக்க ஆவணங்கள் கொடுத்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து, நீதிமன்றத்தை நாடியபோது இன்று செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்று கூறினார்.

Rti

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: