டெல்லி மாநாடு சென்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்: தமிழக அரசு

டெல்லி மாநாடுக்கு சென்று வந்துள்ளவர்களில் ஒருசிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிருப்பதால் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவ்வாறு வந்தவர்களைக் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது

By: Updated: April 1, 2020, 11:58:08 AM

டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள், தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று, தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்..

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வீட்டை அளித்த அமமுக நகரச் செயலாளர்

 

 

டெல்லியில் நடந்த மாநாட்டில்  தமிழகத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அவ்வாறு மாநாடுக்கு சென்று வந்துள்ளவர்களில் ஒருசிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிருப்பதால் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவ்வாறு வந்தவர்களைக் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், வள்ளியூர், களக்காடு, அம்பாசமுதத்திரம், தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர் ஆகிய இடங்களில் 23 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் கூறுகையில், “தமிழகத்தில் இன்று காலை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது. இந்த 50 நபர்களில், 45 பேர் டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,131. இதில், 515 பேரை மட்டுமே இதுவரை கண்டறிந்து உள்ளோம். மீதம் உள்ளவர்கள் தயவு செய்து தாங்களாக முன்வர வேண்டும். நாமக்கல்லில் 18 பேர், நெல்லையில் 22 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள்.

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர். உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம். அவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றிருந்தால் கூட எங்களை தொடர்பு கொள்ளமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:New 50 corona cases tamil nadu total 124 beela rajesh

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X