தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக பூபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது செயலாளராக உள்ள ஜமாலுதீனின் பதவிக் காலம் இன்றோடு முடிவடைகிறது. இதனையடுத்து புதிய செயலாளராக பூபதி நியமனம் செய்யப்படுகிறார். முன்னதாக, பூபதி கூடுதல் செயலாளராக பதவி வகித்து வந்தார்.
மதுரையில் 18.2.60 அன்று பிறந்த பூபதி, மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். பின் எம்.எல். பட்டம் பெற்ற அவர் 21.8.1985 ஆண்டு ஏஎஸ்ஓவாக பதவியில் சேர்ந்தார். கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி அவர் சட்டபேரவையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.
கடந்த 2012-ஆம் ஆண்டே ஜமாலுதீனின் பதவிக் காலம் முடிவடைந்தது. ஆனால், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஜமாலுதீனின் பதவிக் காலத்தை நீட்டித்தார். இதனால், ஐந்து ஆண்டுகள் கூடுதலாக அவர் பணியாற்றிவந்தார். இந்நிலையில், இன்று மாலையோடு அவர் பணி நிறைவு செய்கிறார். பூபதியும் இன்று மாலை சட்டப்பேரவையின் புதிய செயலாளராக பதவியேற்பார் என தெரிகிறது.