புத்தாண்டை சுற்றுலாவோட துவங்க ரெடியா சென்னை மக்காஸ் : அதுவும் டீ காசுல, டீக்கா டிரஸ் பண்ணிட்டு வாங்க…

New year 2020, New year Chennai tour, Happy New year 2020 : நாளை புத்தாண்டு 2020 பிறக்கப்போகுது. சென்னை மக்கள், இந்த புத்தாண்டை, சென்னையின் புகழ்மிக்க இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று குதூகலிக்க, அதுவும் குறைந்த கட்டணத்தில் தமிழக சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

By: Updated: December 31, 2019, 10:42:27 AM

நாளை புத்தாண்டு 2020 பிறக்கப்போகுது. சென்னை மக்கள், இந்த புத்தாண்டை, சென்னையின் புகழ்மிக்க இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று குதூகலிக்க, அதுவும் குறைந்த கட்டணத்தில் தமிழக சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, உள்ளாட்சி தேர்தல் இன்ன பிறகாரணங்களால், கல்லூரிகள், பல்கலைகழகங்கள் என உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இந்தாண்டு அரையாண்டுகால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை கொண்டாடி வரும் சென்னை மக்களின் கொண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், தமிழக சுற்றுலாத்துறை, சென்னையின் புகழ்மிக்க இடங்களான மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தாண்டு போக்குவரத்து மாற்றம் – போலீசார் வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்

எங்கெங்கு போகலாம் : திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருட்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.

சுற்றுலா எங்கு துவங்குகிறது? : சுற்றுலாப் பயணிகளை ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்திற்கு அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம். எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம்.

கட்டணம் : காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை செல்லதக்கதாகும்.

மேலும் விபரங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2, தொலைபேசி: 04425333333/ 25333444/ 25333857/ 25333850-54, கட்டணமில்லா தொலைபேசி: 180042531111, இணையதள முகவரி: www.tamilnadutourism.org. தொடர்பு கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:New year 2020 new year chennai tour happy new year 2020 new year chennai tour tamilnadu tourism operates tour at 10 rupees

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X