scorecardresearch

பாரம்பரிய முறையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம்: இது எங்க ஸ்டைல்!

ஆங்கில புத்தாண்டு – இரவில் விளக்கேந்தி,மேலதாலங்கள் முழுங்க நடனமாடியபடி, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.

பாரம்பரிய முறையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம்: இது எங்க ஸ்டைல்!

ஆங்கில புத்தாண்டு –  இரவில் விளக்கேந்தி,மேலதாலங்கள் முழுங்க நடனமாடியபடி, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.

புத்தாண்டை முன்னிட்டு கோவையில் மேலதாலங்கள் முழுங்க, பட்டாசுகள் வான வேடிக்கையுடன், பக்தர்கள் கையில்  விளக்கேந்தி நடனமாடியபடி,ஐயப்பன் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோவில்கள், கிருத்துவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் புத்தாண்டையொட்டி மக்கள் நலன்பெற வேண்டி அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் ஐயப்ப தேச விளக்கு தேரோட்டம் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமியின் ரதத்தின் முன்பாக நாதஸ்வரம்,உடுக்குப்பாட்டு,தாலபொலி,சிங்காரி மேளம், தையம், பூக்காவடியுடன், பக்தர்கள் கையில் விளக்கை ஏந்தி நடனமாடியபடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

ஆர்.எஸ்.புரம்,லாலிரோடு பெரிய மாரியம்மன் கோவிலின் முன்பாக பட்டாசுகள் வான வேடிக்கையுடன் துவங்கிய திருவீதி உலா பிஎம்சி காலனி வரை சென்று முடிவடைந்தது.இதில் 300க்கும் மேற்பட்ட  மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

செய்தி: பி.ரஹ்மான்.கோவை

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: New year celebration kovai people