அரசு அதிகாரிகள் வராததால் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு... தொடரும் போராட்டம்!

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முத்தரப்பு பேச்சசுவார்த்தைக்கு வரச் சொல்லிவிட்டு அவர்கள் வரவில்லை...

ஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் போக்குவரத்து தொழிலாளர்களுடன், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுவதாய் இருந்தது.

தொழிலாளர் நலத்துறை தனித்துணை ஆணையர் யாசின் பேகம் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். 47 தொழிற்சங்கங்களுடன், தமிழக அரசு மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் இந்த பேச்சுவார்த்தை  நடத்தப்பட இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் யாரும் இந்த பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என சிஐடியு, தொமுச சங்கங்கள் தெரிவித்துள்ளன.  இதன்காரணமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
×Close
×Close