நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காலில் காயத்துடன் ஐந்து நாட்களுக்கு மேல் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறை வைத்து கூண்டில் பிடிபட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக காலில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று சுற்றி வருவதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் இரு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
ஐந்து நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு தேவர் சோலை அருகே உள்ள தேவன் எஸ்டேட் அஞ்சு கோயில் பகுதியில் வைத்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது.
இதையடுத்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மற்றும் ஏசிஎப் கருப்பையா கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வனவர் குமரன் தலைமையில் வனத்துறையினர், சிறுத்தை பிடிபட்ட தேவன் எஸ்டேட் அஞ்சு கோயில் பகுதிக்கு சென்றனர்.
தற்போது பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“