அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு தடை இல்லை; டிடிவி ஆதரவு எம்எல்ஏ-வுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், டிடிவி ஆதரவு எம்எல்ஏ-வுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், டிடிவி ஆதரவு எம்எல்ஏ-வுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
ttv dhinakaran, vetrivel, aiadmk

அதிமுக பொதுக் குழுக் கூட்டதிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், டிடிவி ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தினகரனை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அதிமுக-வில் தினகரனை ஓரங்கட்டி விட்டு, எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிகள் கடந்த மாதம் 21-ம் தேதி இணைந்தன.

அதேபோல், அதிமுக தலைமைக் கழகத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வருகிற 12-ம் தேதியன்று (நாளை) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.

இதனிடையே, அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்த வெற்றிவேலுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அதிமுக பொதுக் குழுக் கூட்டதிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்திற்காக வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டதுடன் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Advertisment
Advertisements

அதிமுக தலைமைக்கழகத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்திற்கு அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், எம்எல்ஏ-க்கள் சுமார் 30 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேபோல், முதல்வர் பழனிசாமி தலைமையில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் 110 எம்எல்ஏ-க்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால், இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும், நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தவும், அதில் அனைவரையும் பங்கேற்க செய்யும் பொருட்டு இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதேசமயம், இந்த பொதுக் குழுக் கூட்டத்திற்கு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Ops Eps Ttv Dhinakaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: