Advertisment

சசிகலாவை நீக்கும் வரை இணைப்பு இல்லை: கே.பி.முனுசாமி உறுதி

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் வரை இரு அணிகளையும் இணைக்கும் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என கே.பி.முனுசாமி திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

author-image
manik prabhu
Aug 10, 2017 15:36 IST
சசிகலாவை நீக்கும் வரை இணைப்பு இல்லை: கே.பி.முனுசாமி உறுதி

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் வரை இரு அணிகளையும் இணைக்கும் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான கே.பி.முனுசாமி திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக அம்மா, அதிமுக புரட்சித் தலைவி அம்மா என இரு அணிகளாக அதிமுக-வினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த அணிகளை இணைப்பதற்கு பல்வேறு முயற்சிகள மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, பிளவுபட்ட அதிமுக-வின் இரு அணிகளையும் இணைக்கும் பேச்சுவார்த்தைக்கு இரு அணிகள் சார்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மறைவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இரு கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை என பன்னீர்செல்வம் அணியினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். அதற்கு ஏற்றாற்போல் முதல்வர் பழனிசாமி அணியினர், தினகரனை புறக்கணித்து வந்தனர். அவருக்கு எதிரான கருத்துகளையும் கூறி வந்தனர்.

இதனிடையே, பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் பன்னீர்செல்வம் அதிரடியாக தெரிவித்தார். எனினும், மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் விரைவில் இணையும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் தெரிவித்தனர். இதற்கு ஓபிஎஸ் தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர்.

இருந்த போதிலும், இரு அணிகளும் விரைவில் இணையும் என முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் உறுதியாக தெரிவித்து வந்தனர். இன்னும் 15 நாட்களில் அதிமுக இரு அணிகளும் இணையும் என அமைச்சர் வீரமணி தெரிவித்தார். அதேபோல், சுதந்திர தினத்திற்குள் அதிமுக அணிகள் ஒன்றிணையும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தினகரனின் நியமனம் அதிமுக சட்டவிதிகளுக்கு விரோதமானது. தினகரன் அதிமுக பொறுப்பாளர்களை தன்னிச்சையாக நியமித்துள்ளார். கட்சி தொடர்பாக முடிவுகள் எடுக்க தினகரனுக்கு உரிமை இல்லை. இதுவரை கட்சியில் அவர் எடுத்த முடிவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவைகள் செல்லாத ஒன்று. தினகரன் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. தினகரனால் தரப்பட்ட பதவிகளை அதிமுக-வினர் நிராகரிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது ஆதரவாளரான கே.பி.முனுசாமி, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் வரை இரு அணிகளையும் இணைக்கும் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தற்போது தான் விழித்துள்ளது. அதிமுக-விலிருந்து சசிகலா, தினகரன் உட்பட அவர்களது குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் நீக்க வேண்டும். எங்களின் பிரதான இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

மேலும், கொள்கையுடன் செயல்படும் ஓ.பி.எஸ் போன்றவர்களை பதவியை கொடுத்து சரி செய்ய முடியாது. ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்பது யூகமே என்றும் கே.பி.முனுசாமி விளக்கம் அளித்துள்ளார்.

#Ttv Dhinakaran #Sasikala #Ops #K P Munusamy #O Panneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment