அணு உலையை எதிர்த்தால், மின்சாரம் கிடையாது: பியூஸ் கோயல்

கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உள்ள உலைகள் 3, 4 ஆகியவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்குவது குறித்து பரீசிலனை செய்யப்படும்.

அணு உலையை நிறுவ அனுமதிக்காத மாநிலங்கள், அணு உலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பெற முடியாது என மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் மின்திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மத்திய மின்துறை அமைச்சர் சென்னை வந்தார். பின்னர், தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் பியூஷ் கோயல் செய்திளாளர்களிடம் கூறும்போது: மத்திய அரசின் மின்சார திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கிறது. தமிழகத்தில் மின்சார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த 3 ஆண்டுகளில் மின்சார சேமிப்புக்காக சுமார் ரூ.11,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உள்ள உலைகள் 3, 4 ஆகியவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்குவது குறித்து பரீசிலனை செய்யப்படும். உதய் மின் திட்டத்தினால் தமிழகத்திற்கு மின்சாரம் மிச்சமாவதோடு, தமிழகத்தில் மின்துறையும் வளர்ச்சியடையும். செய்யூர் நிலக்கரி மின் திட்டத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். அணு உலையை நிறுவ அனுமதிக்காத மாநிலங்கள், அணு உலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பெற முடியாது என்று கூறினார்.

×Close
×Close