எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் திருப்தி இல்லை... ஓபிஸ் குற்றச்சாட்டு

எங்கள் அணியைச் சேர்ந்த யாரும் பண பேரத்தில் ஈடுபடவில்லை என பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ பன்னீர் செல்வம் ஆங்கில பத்திரிக்கைக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

அதிமுக-வை சசிகலா குடும்பத்தினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடாது. அதிமுக-வானது தொண்டர்களுக்கான கட்சி, அதனை எடப்பாடி பழனிசாமியோ அல்லது நானோ கட்டுப்படுத்துவது என்பது தவறானது.

மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் குறித்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியானது. இது தொடர்பாக அவர் உரிய விளக்கம் அளித்திருக்கிறார்.

எந்த ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரா அல்லது சட்டமன்ற உறுப்பினரோ பணபேர செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்பதே எங்களின் விருப்பம். பண பேரத்தில் யார் ஈடுபட்டாலும் அது குற்றம் தான்.எங்கள் அணியைச் சேர்ந்தவர்களில் யாரும் பண பேரத்தில் ஈடுபடவில்லை.

தமிழக அரசியலில் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாடகங்களும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன. சில நாடகங்கள் ஆன்மீகப் பாதைக்கு அழைத்து செல்வதாக இருக்கின்றன.

அதேபோல, டிடிவி தினகரன் ஆதரவாளர்களால் நடத்தப்படும் நாடகங்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. மேலும், தமிழகத்தில் நடந்துவரும் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் திருப்தியில்லை. மக்களும் அப்படித் தான் நினைத்து வருகின்றனர்.

குடியரசுத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இது குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி தெரிவிப்போம் என்று கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close