scorecardresearch

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ: ஜார்கண்டை சேர்ந்த நபர் கைது

செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் இந்த போலி விடியோவை பரப்பியதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ: ஜார்கண்டை சேர்ந்த நபர் கைது

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறிப்பாக பீகார், அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மேல் தமிழக மக்களின் தாக்குதல் செலுத்துவதாக சமீபத்தில் வீடியோ வைரலானது.

ஹோட்டல், துணிக்கடை மற்றும் கட்டிட கட்டுமானம் என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவரும் வடமாநில தொழிலாளர்கள் மீது வெறுப்பு உண்டாகும் விதமாக தென்படுவதால், காவல்துறை விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இதை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் இந்த போலி விடியோவை பரப்பியதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு உடந்தையாக இருந்த ஆறு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கு இடையே பகைமையை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டதால், இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: North indian arrested for spreading rumour about attack