Advertisment

கடன் உதவி அளித்து குலத் தொழிலுக்குள் தள்ளும் முயற்சி: விஸ்வகர்மா திட்டத்துக்கு திருமாவளவன் எதிர்ப்பு

மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம், கடன் உதவி அளித்து குலத் தொழிலுக்கு தள்ளும் முயற்சி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Governor R N Ravi, Dismissal of V Senthil Balaji, Order on hold, Condemnation of governors action, திருமாவளவன், விசிக, திமுக, ஆர்.என். ரவி, ஆளுநர் ஆர் என் ரவியை திரும்ப பெறக் கோரி போராட்டம், திமுக தலைமையில் போராட்டம், தமிழ்நாடு, செந்தில் பாலாஜி, Opposition to action against democracy, Constitution violation, Motive to trouble DMK government, Call for all-party meeting

மக்களவை எம்.பி. திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா என்னும் திட்டம் மீண்டும் குலக்கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு முயற்சி.

Advertisment

குலத் தொழில் என்ற பெயரில் இதனை ஊக்கப்படுத்த ரூ.13 ஆயிரம் கோடியை பிரதமர் ஒதுக்கியிருக்கிறார். இது விரும்புகிறவர்களுக்கு விரும்பும் தொழிலை கற்றுக் கொள்ள திட்டம் இல்லை.

இது பரம்பரை பரம்பரையாக குடும்ப தொழிலை செய்துவரும் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கி அவர்களின் திறமையை மேம்படுத்த நிதி உதவி தருகிறோம் என்கிறார்.

அதாவது துணி வெளுக்கும் நபர்களுக்கு அந்தத் திறன் ஏற்கனவே உள்ளது. அதை மேம்படுத்தும் திட்டம் என்பது போன்று உள்ளது. ஆகவே இது குலக்கல்வி திட்டத்தின் மறுவடிவம் தான் இது.

இந்தத் திட்டத்தை எதிர்த்து வரும் செப்டம்பர் 6ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார். மேலும் இந்தத் திட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கடுமையாக எதிர்க்கின்றன எனவும் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் நடந்தது. இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளும் எனவும் எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thirumavalavan Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment