Advertisment

கூடங்குளத்தில் சைபர் தாக்குதல் நடந்தது உண்மை தான் - அணுசக்திக் கழகம்

இந்திய அணுசக்திக் கழகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சில மால்வேர் தாக்குதலை கண்டுபிடித்திருக்கிறோம் என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kudankulam Nuclear Power Project and ISRO cybersecurity hacked, Kudankulam nuclear plant Cyber attack - NPCIL accepts malware

இந்தியாவில் மிகப் பெரிய அணுமின் நிலையமான கூடங்குளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக  பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சைபர் பாதுகாப்பு கவுன்சிலிடம்   (என்.சி.எஸ்.சி) எச்சரிக்கை விடுத்தது.

Advertisment

என்.சி.எஸ்.சி இதற்காக தனிப்பட்ட சைபர்குழு அமைத்து கூடங்குளத்தை ஆய்வு செய்ய அனுப்பியது.  இந்தக் குழு  செப்டம்பர் நடுப் பகுதியில் கூடங்குளத்தை ஆய்வு செய்து, சில தவறுகள் நடந்திருப்பதாகவும்,  அதை சரி செய்வதற்கான பரிந்துரைகளை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் இந்த  சைபர் தாக்குதலை  முழுவதுமாக மறுத்தது. இந்திய கணினி எமர்ஜன்சி  ரெஸ்பான்ன்ஸ் (சி.இ.ஆர்.டி-இன்), தேசிய நுட்பமான தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையம் (என்.சி.ஐ.ஐ.பி.சி), தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள்  போன்றோர்கள்  என்.சி.எஸ்.சி தலைமையிலான குழுவில்  இருந்தனர் .

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் ட்விட்டரில்  “இது மிகவும் தீவிரமானதாகத் தெரிகிறது. ஒரு விரோத சக்தியால் நமது அணுசக்தி நிலையங்கள் மீது சைபர் தாக்குதலை நடத்த முடிந்தால், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கான தாக்கங்கள் கற்பனை செய்ய முடியாதவை. இதனால், அரசாங்கம் பொது மக்களுக்கு விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் ” என்று  பதிவு செய்திருந்தார்.

 

 

 

 

இந்நிலையில் தற்போது , இந்திய அணுசக்திக் கழகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சில மால்வேர் தாக்குதலை கண்டுபிடித்திருக்கிறோம் என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறது. மேலும், சைபர் தாக்குதலுக்கு பாதிப்புக்குள்ளான கணினி, வெறும் நிர்வாக செயல்களுக்காக மட்டும் பயன்படுத்தும் கணினி, ஆகையால்  இது வெளிப்புற இணையங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளது.

ஆனால், அணுசக்தி நிலையங்களுக்குள் செயல்படும் கணினிகளில் இந்த  சைபர் தாக்குதல் நடை பெறவில்லை  என்று  தெரிவித்துள்ளது. ஏனெனில் , அணுசக்தி நிலையங்களின் கட்டுப்பாட்டு கணினிகள் எதோடும் இணைக்கப்படவில்லை. அதன் காரணத்தால் சைபர் தாக்குதல் நடத்துவது எளியக் காரியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக நாங்கள் கண்காணித்து வருவதாக தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment