/tamil-ie/media/media_files/uploads/2017/06/a642.jpg)
கடந்த ஆண்டு இதே நாளில் (ஜூன் 24) தான் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இளம்பெண் ஸ்வாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுவாதி கொலை மற்றும் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை ஆகியவற்றில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. இதுவரை நடந்தது என்ன? சுருக்கமாக..
2016
ஜூன் 24: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை
ஜூலை 1: திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் ராம்குமார் கைது
ஜூலை 1: ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி என தகவல்
ஜூலை 2: நெல்லை, சென்னை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு சிகிச்சை
ஜூலை 5: புழல் சிறையில் ராம்குமார் அடைப்பு
ஜூலை 5: ராம்குமார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல்
ஜூலை 18: காணொலி காட்சி மூலம் ராம்குமாரிடம் நீதிபதி விசாரணை
ஆகஸ்ட் 8: ராம்குமாரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
செப்.18: சிறையில் மின் கம்பியைப் கடித்து ராம்குமார் தற்கொலை செய்ததாக அறிவிப்பு
செப். 20: ராம்குமார் பிரேதப் பரிசோதனை வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை
அக். 1: எய்ம்ஸ் மருத்துவர் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை
அக். 3: ராம்குமார் உடல் சொந்த ஊரில் அடக்கம்
2017
மார்ச் 7: ராம்குமார் உயிரிழந்ததால், வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.