சேலம் மாவட்டம் ஆத்தூரில், சேலம் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி கிளை உள்ளது. இதன் வாசலில் கிழிக்கப்பட்ட நிலையில் பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் வீசப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
குவியல் குவியலாக இந்த ரூபாய் நோட்டுக்கள் கிழித்து வீசப்பட்டுள்ளன. சுமார் 5 கிலோ எடையுள்ள இந்த பழைய நோட்டுக்களின் மதிப்பு, 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கலாம் என தெரிகிறது.
இந்த கூட்டுறவு வங்கி கிளை அருகிலேயே, எஸ்பிஐ வங்கி கிளையும் உள்ளதால், எந்த வங்கியில் இருந்து இந்த பழைய ரூபாய் நோட்டுக்கள் இப்படி கிழித்து வீசப்பட்டுள்ளன, இவற்றை யார் கொண்டு வந்து போட்டுள்ளனர் என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Old 5001000 rs notes dared worth of 10 lakhs