ஒருவர் தனது வீட்டில் எவ்வளவு மதுவகைகளை கையிருப்பு வைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருவர் தனது வீட்டில், இந்தியாவில் தயாரிக்கபட்ட வெளிநாட்டு மதுபான வகைகளில் ஒரு பாட்டிலும், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுவகைகளில் ஒரு பாட்டிலும், ஒயின் ஒரு பாட்டிலும், 2 பீர் பாட்டிலும் வைத்துக் கொள்ளலாம் என விதி இருந்து வந்தது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த விதியில் திருத்தம் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில், மற்ற மாநிலத்தில் இருக்கும் நிலவரப்படி இந்த விதி திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒருவர் தனது வீட்டில் எவ்வளவு மதுவகைகளை கையிருப்பு வைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் கூறியதாவது: இந்தியாவில் தயாரிக்கபட்ட வெளிநாட்டு மதுபான வகைகளில் 6 பாட்டில்களும், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுவகைகளில் 6 பாட்டிலும், 12 பீர் பாட்டிலும், ஒயின் 12 பாட்டிலும் வைத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறி அதிக மது பாட்டில்களை வைத்திருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும். இதற்கு குறைந்தபட்ச தண்டனை ரூ.2,000 அபராதமாகும். குடியிருப்புகளில் வைப்பதற்கு மட்டுமே இந்த புதிய விதித்திருத்தம் அனுமதிக்கிறதே தவிர, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது.