காவு வாங்கிய ‘சென்னை சில்க்ஸ்’; இடிப்பு பணியில் ஒருவர் பலி!

தீக்கு முழுவதும் இரையான ‘தி சென்னை சில்க்ஸ்’ கட்டிடத்தின் இடிப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அக்கட்டிடத்தின் கீழ் தளமானது ‘ஜா கட்டர்’ இயந்திரம் மூலம் இன்று இடிக்கப்பட்டு வந்தது. அப்போது கற்கள் அந்த இயந்திரம் மீது சரிந்து விழுந்ததில் சரத் எனும் ஜா கட்டர்…

By: Updated: June 10, 2017, 04:59:14 PM

தீக்கு முழுவதும் இரையான ‘தி சென்னை சில்க்ஸ்’ கட்டிடத்தின் இடிப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அக்கட்டிடத்தின் கீழ் தளமானது ‘ஜா கட்டர்’ இயந்திரம் மூலம் இன்று இடிக்கப்பட்டு வந்தது. அப்போது கற்கள் அந்த இயந்திரம் மீது சரிந்து விழுந்ததில் சரத் எனும் ஜா கட்டர் இயந்திரஓட்டுநர் பலியாகியுள்ளார்.

இடிபாடுகளில் சிக்கிய அவரது உடல் தற்போது மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து, கட்டிடத்தை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:One died after collapse of chennai silks floor while demolish it

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X