Advertisment

ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஆணையம்

தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டங்களை தடை செய்ய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
online rummy ban, TN govt formed online gaming authority, foremer IAS nasimuddin, Online Rummy Ban, ஆன்லைன் சூதாட்டம், தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய ஆணையம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஆணையம், online rummy ban authority, TN govt formed online gaming authority, ex IAS nasimuddin

ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஆணையம்

தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டங்களை தடை செய்ய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டு பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தன. தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைச் சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டு ஆணைத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நசிமுதீன் நியமிக்கபட்டுள்ளார்.

இந்த ஆணையத்தில், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி சாரங்கன், பேராசிரியர் செல்லப்பன் உள்பட 4 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உளவியலாளர் ரவீந்திரன், தனியார் நிறுவன அதிகாரி விஜய் கருணாகரன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு அரசு வெறும் யூகங்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் நிறுவனங்கள் வாதிட்டுள்ளன.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பில் கடுமையான விதிகள், சுய ஒழுங்கு முறையாக பின்பற்றப்படுவதாக தெரிவிக்கபட்டது. தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதில்லை. பந்தயம் வைத்து விளையாடும் திறமைக்கான விளையாட்டு சூதாட்டமே என்ற அரசின் வாதம் ஏற்கத்தக்கதல்ல என கூறியுள்ளனர்.

மேலும், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து, அதை மீறினால் தடை செய்யலாம் என தெரிவித்ததை அடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கு ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment