டிரான்ஸ்போர்ட் ஸ்டிரைக்கால் மக்கள் பாதிப்பு... முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் : ஓபிஎஸ்

அதிமுக அணிகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு எங்கள் தரப்பில் முட்டுக்கட்டை இல்லை

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பெரும்பாலான பேருந்துகள் ஓடாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் செய்திளார்களிடம் பேசியபோது: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்கின்றன. இதன் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், இரு அணிகளாக பிளவுபட்டுள்ள அதிமுக இணைவது குறித்து பன்னீர் செல்வம் பதிலளித்தபோது,
’இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். ஆதலால், இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு எங்கள் தரப்பில் எந்தவித முட்டுக்கட்டையும் இல்லை’ என்று கூறினார்.

×Close
×Close