ரஜினி வருகைக்காக எங்களது கதவுகள் திறந்திருக்கின்றன... பாஜக தலைவர் அமித் ஷா

அரசியலுக்கு எப்போது வர வேண்டும் என்பது குறித்து ரஜினிகாந்த் மட்டுமே முடிவு செய்ய முடியும்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்த வரையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும்பட்சத்தில், அவருக்காக பாஜக-வின் கதவுகள் திறந்தே இருக்கும் என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் அமித் ஷா பேசும்பபோது: அரசியலுக்கு எப்போது வர வேண்டும் என்பது குறித்து ரஜினிகாந்த் மட்டுமே முடிவு செய்ய முடியும். அதனால், அவர் அரசியலுக்கு வருவது பற்றி முதலில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். பாஜக-வைப் பொறுத்தவரையில் நல்ல மனிதர்கள் யார் வந்தாலும் நாங்கள் வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

×Close
×Close