யோகா பாட்டி நானம்மாவை உலகம் நினைவுக் கூறும்

நானம்மாள் இதுவரையில் 10 லட்சம் மக்களுக்கு யோகா கலையையும், அதன் நுட்பங்களையும் கொண்டு சேர்த்து இருந்திருப்பார்

Yoga teacher nanammal dies at 99 : யோகா நானம்மாள் இயற்கை எய்தினார்
Yoga teacher nanammal dies at 99 : யோகா நானம்மாள் இயற்கை எய்தினார்

Yoga teacher nanammal dies at 99 :  ஜமீன் காளியாபுரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கோயம்பத்துர் ஞானபதி என்ற பகுதியின்  அடையாளமாக மாறி, தேசிய அளவில் பாராட்டுப் பெற்ற  நானம்மாள் நேற்று இயற்க்கை எய்தினார் . வயது 99.

யோகா கலையை தனது பன்முகக் கலையால் உலகத்திற்கு வித்திட்டவர் இந்த  நானம்மாள். யோகா கலைக்கு இவர் செய்த சேவைகளுக்காக இந்திய அரசின் சார்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பத்மா ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. யு டியூப்  மூலமாகவும் சரி, தான் நடத்தி வந்த ஓசோன் யோகா மையம் மூலமாகவும் சரி, நானம்மாள் இதுவரையில் 10 லட்சம் மக்களுக்கு யோகா கலையையும், அதன் நுட்பங்களையும் கொண்டு சேர்த்து இருந்திருப்பார். அவர் பயற்றுவித்த 600 மாணவர்கள் தற்போது உலகமெங்கும் யோகா கலையை சொல்லிக் கொடுத்து வருகிறார்கள்.

 


ஆறு குழந்தைகள், 12 பேரன்/பேத்திகள், 13 கொள்ளு பேரன்/பேத்திகள் நானம்மாலுக்கு பிரியா விடைக் கொடுத்துள்ளனர்.  சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தார் அனைவரையும் அழைத்த   நானம்மா, இன்னும் 48 நாட்களுக்குள் நான் உலகத்திற்கு விடைக் கொடுத்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். சொன்னது போலவே, 48 நாட்கள் வருவதற்கு இன்னும்  எட்டு நாட்கள் இருக்கும் நிலையில் இறந்து விட்டார்.

திமுக ஸ்டாலின் நானம்மாவுக்கு தனது மரியாதையை ட்விட்டரில் , ” உடல்நலம் காக்கும் யோகா பயிற்சி அளித்து, உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திய, ‘பத்மஸ்ரீ’ நானாம்மாள் அம்மையாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் பயிற்றுவித்த வழியில் உடல்நலம் பேணி ஆரோக்கியமான சமுதாயம் அமைப்பதே அவருக்கான புகழஞ்சலியாகும்! ” என்று பதிவு செய்துள்ளார்

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Padmashri nanammal nanammal dies at 99 nanammal trained yoga for 10 lakh people

Next Story
பிழியும் சோகம் ஒருபுறம்; தளராத நம்பிக்கை மறுபுறம்: சுர்ஜித் மீட்பு ஹைலைட்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com