பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த கும்பாபிஷேகம், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று வருகின்றனர்.
கும்பாபிஷேகம் திருவிழாவிற்காக கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி மலை மீது 90 யாகசாலை அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க எட்டு கால பூஜை நடைபெற்றது.

இன்று அதிகாலை 5 மணி முதல், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத காலை 8:00மணி முதல் 9:30 மணிக்குள்ளாக கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரத்திற்கு கும்பாபிஷேகத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவப்பட்டது. மேலும் கும்பாபிஷேகத்திற்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்கு தண்ணீர் பீச்சும் கருவிகள் பயன்படுத்தப்பட்டது.
மேலும் இந்த கும்பாபிஷேக திருவிழாவில் கலந்து கொள்ளும் இரண்டு லட்சம் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இந்த கும்பாபிஷேக திருவிழாவிற்கு கலந்து கொண்டனர்.