Advertisment

Chidambaram Lok Sabha Election Results 2024: சிதம்பரம் தொகுதி : திருமாவளவன் முன்னிலை

மக்களவை தேர்தல் 2024; சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிலவரம் இங்கே.

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

சிதம்பரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டின் 27வது  நாடாளுமன்ற தொகுதி சிதம்பரம். இந்த தொகுதி பட்டியல் இன சமூகதிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இது தனி தொகுதி ஆகும். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அருகில் உள்ள அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் பரவி உள்ளது.

Advertisment

பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்ற தொகுதி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர்  மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளியும், கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற  தொகுதிகளை  இணைத்து  தொகுதி மறுவரையறைக்கு பிறகு 2009ம் ஆண்டு சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது.

2024 தேர்தல்

இந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக திருமாவளவன் போட்டியிடுகிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக சந்திரஹாசன் போட்டியிடுகிறார். பா.ஜ.க சார்பாக கார்த்தியாயினி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பாக ஜான்சி ராணி போட்டியிடுகிறார்.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 9,997 வாக்குகள் பதிவாகி உள்ளது.  முதியோர் வாக்குகள் 609 ஆக உள்ளது. மொத்தம் 10, 606 வாக்குகளை பிரித்து எண்ணி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வி.சி.க தலைவர் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார். 

 2019 மக்களவை தேர்தல் முடிவுகள்

கடந்த முறை தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 500,29 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 4,97,010 வாக்குகள் பெற்ற  அ.தி.மு.க  வேட்பாளர் பி.சந்திரசேகர் இரண்டாம் இடம் பிடித்தார். சுயேச்சையாக போட்டியிட்ட அ. இளவரசன் 62,308 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.சிவஜோதி 37,471 வாக்குகளும், மக்கள் நீதிமையம் வேட்பாளர் டி.ரவி 15,334 வாக்குகளும் பெற்றனர்.

2014 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

மு. சந்திரகாசி ( அ.தி.மு.க)  429,536 வாக்குகள். திருமாவளவன் ( வி.சி.க) 3,01,041 வாக்குகள், சுதா மணிரத்தினம் ( பா.ம.க) 2,79,016 வாக்குகள்.

2009 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

தொல். திருமாவளன் ( வி.சி.க) 428,804 வாக்குகள்,   இ.பொன்னுசாமி ( பா.ம.க) 3,29,721 வாக்குகள், எஸ்.சசிகுமார் ( தே.மு.தி.க) 66,283 வாக்குகள்.

2004 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

இ.பொன்னுசாமி ( பா.ம.க ) 343,424 வாக்குகள், தொல் திருமாவளன் (ஜெ.டி.(யு) ) 2,55,773) வாக்குகள், டி.பெரியசாமி ( பா.ஜ.க) 1,13,974 வாக்குகள்.

1999 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

இ.பொன்னுசாமி ( பா.ம.க) 345,331 வாக்குகள், திருமாவளவன் (             டிஎம்சி(எம்) ) 2,25,768 வாக்குகள், டி.சுமதி உதயகுமார் ( காங்கிரஸ்) 1,50,794 வாக்குகள்.

1998 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

ஆர். எழில்மலை ( பா.ம.க) 305,372 வாக்குகள், வி.கணேசன் ( தி.மு.க ) 2,97,417 வாக்குகள், டாக்டர் ப.வள்ளல்பெருமான் 43,214 வாக்குகள்  ( காங்கிரஸ்) , பி.நாகப்பன் ( பி.எஸ்.பி) 19,922 வாக்குகள்.

1996 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

வி.கணேசன் ( தி.மு.க) 336,164ன் வாக்குகள், ஆர்.ஏழுமலை ( பா.ம.க) 1,59,898 வாக்குகள். ப.வள்ளல்பெருமான் ( காங்கிரஸ்)           1,44,478 வாக்குகள், பி.எஸ்.மகாலிங்கம் (சி.பி.ஐ ( எம்) ) 28,646 வாக்குகள்,    எஸ்பி கிருபாநிதி ( பா.ஜ.க) 7,954 வாக்குகள்.  

1991
மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

ப.வள்ளல்பெருமான் ( காங்கிரஸ்) 306,121 வாக்குகள், சுலோச்சனா அய்யாசாமி ( தி.மு.க) 1,69,231 வாக்குகள், ஆர்.ஏழுமலை ( பா.ம.க) 1,44,946 வாக்குகள்.

1989 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

ப.வள்ளல்பெருமான் ( காங்கிரஸ்) 205,229 வாக்குகள், அ.அய்யாசாமி ( தி.மு.க) 1,76,946 வாக்குகள்,           ஆர்.ஏழுமலை ( பா.ம.க) 1,58,155 வாக்குகள், சி.ஏ.பாலகிருஷ்ணன் ( இந்திய மனிதநேயக் கட்சி)  1,20,197 வாக்குகள்.

1984 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

ப.வள்ளல்பெருமான் ( காங்கிரஸ்) 329,892 வாக்குகள், எஸ்.கண்ணபிரான் ( தி.மு.க) 2,09,001 வாக்குகள்.

1980 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

வி.குழந்தைவேலு ( தி.மு.க) 302,523 வாக்குகள், எஸ்.மகாலிங்கம் ( சி.பி.ஐ ( எம்) ) 1,63,798 வாக்குகள்.

1977 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

அ.முருகேசன் ( அ.தி.மு.க) 278,406 வாக்குகள், என்.ராஜாங்கம் ( தி.மு.க) 1,69,172 வாக்குகள்.

1971 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

வி.மாயவன் ( தி.மு.க) 203,059 வாக்குகள், எல்.இளையபெருமாள் ( காங்கிரஸ்) 1,80,661.

1967 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

வி.மாயவன் ( தி. மு.க) 205,193 வாக்குகள், எல்.இளையபெருமாள் ( காங்கிரஸ்) 1,87,764  வாக்குகள்.

1962 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

ஆர்.கனகசபை பிள்ளை ( காங்கிரஸ்) 140,731 வாக்குகள், ஆர்.தில்லைவில்லாலன் ( தி.மு.க) 1,36,671 வாக்குகள், டி.கோவிந்தசாமி கச்சிராயர் ( ஸ்வதந்தரா கட்சி ) 18,021 வாக்குகள்.

1957 மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்

ஆர்.கனகசபை பிள்ளை ( காங்கிரஸ் ) 176,501 வாக்குகள், இளையபெருமாள் ( ,காங்கிராஸ் )1,75,589,

மக்களவை தேர்தல்: முடிவுகளின் வரலாறு

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை தி.மு.க , அ.தி.மு.க, பா.மக விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு என கணிசமான வாக்கு வங்கி உள்ளது. 1957 முதல் இங்கு மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடந்த முதலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சிதம்பரம் தொகுதி அதிகபட்சம் காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க 4 முறையும் , பா.ம.க 3 முறை வெற்றுள்ளன. அ.தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள்  கட்சி தலா இரண்டு முறை வென்றுள்ளது.

வாக்காளர்கள் எண்ணிக்கை நிலவரம்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,10,915 ஆக உள்ளது.  ஆண் வாக்காளர்கள்: 7,49,623,  பெண் வாக்காளர்கள்: 7,61,206, மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 86 பேர் உள்ளனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment